அழிவிலிருந்து மீண்ட ஜென்ட்டூ பெங்குவின்கள்

அன்டார்டிகா பகுதியிலுள்ள ஆர்ட்லி தீவில், கடந்த, 7,000 ஆண்டுகளாக, ‘ஜென்ட்டூ'(Gentoo penguins) என்ற வகையைச் சேர்ந்த பெங்குவின்கள் வாழ்ந்து வருகின்றன. இவை இத்தனை ஆண்டுகளில் குறைந்தது, மூன்று முறையாவது முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு, பின், மீண்டும் பெருகி வந்துள்ளன என்பதை, ‘பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே’ அமைப்பைச் சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட்ஸ் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

அருகில் உள்ள எரிமலை தீவான Deception Island எரிமலையிலிருந்து வரும் எரிமலைச் சாம்பல்களால் ஆர்ட்லி தீவு,  மூடப்பட்டபோது, உயிர் தப்பிய பெங்குவின்கள் நீந்தி பிற பகுதிகளுக்கு தப்பிப் போய், மீண்டும் திரும்பி வந்துள்ளன. ஆனால் பெங்குவின் குஞ்சுகளும், முட்டை இடும் இடங்களும் அழிந்து போயின. மீண்டும் பழைய நிலைக்கு, (பெங்குவின்களும், ஆர்ட்லி தீவும்) திரும்ப கிட்டத்தட்ட 400 முதல் 800 ஆண்டுகள் ஆயின.

இந்த ஆராய்ச்சி, மற்ற இடங்களில் எரிமலையால் பெங்குவின் இனங்களிடம் ஏற்பட்ட பாதிப்பை பற்றி அறிய உதவும் என்று கூறுகின்றனர்.

banner-154181_960_720

Antarctic penguin colony repeatedly decimated by volcanic eruptions

One of the largest colonies of gentoo penguins in Antarctica was decimated by volcanic eruptions several times during the last 7,000 years according to a new study. An international team of researchers, led by British Antarctic Survey (BAS), studied ancient penguin guano and found the colony came close to extinction several times due to ash fall from the nearby Deception Island volcano

On at least three occasions during the past 7,000 years, the penguin population was similar in magnitude to today, but was almost completely wiped out locally after each of three large volcanic eruptions. It took, on average, between 400 and 800 years for it to re-establish itself sustainably.”

An eruption can bury penguin chicks in abrasive and toxic ash, and whilst the adults can swim away, the chicks may be too young to survive in the freezing waters. Suitable nesting sites can also be buried, and may remain uninhabitable for hundreds of years.”

The techniques developed in this study will help scientists to reconstruct past changes in colony size and potentially predict how other penguin populations may be affected elsewhere. For example, the chinstrap penguins on Zavodovski Island, which were disturbed by eruptions from the Mt Curry volcano in 2016.

Source Science Daily

டைனோசர் காலத்தில் வாழ்ந்த மாபெரும் பென்குவின்கள்

நியூசிலாந்து நாட்டில் வாய்பரா நதி (Waipara River) அருகில் கிடைத்த         61 மில்லியன் வயதான புதைபடிவம் (fossil) ஒரு மாபெரும் விலங்கினுடயது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தொல்லுயிரியல்  வல்லுனர்களின் (palaeontologist) தொடர் ஆராய்ச்சியில் அது ஒரு மிகப்பெரிய பென்குவினுடைய புதைபடிவம் என்று தெரிந்தது. இந்த பென்குவின் 150 சென்டிமீட்டர் அதாவது ஒரு மனிதனின் உயரமுடையது

3d90393700000578-4252274-the_newly_described_penguin_lived_around_61_million_years_ago_an-a-17_1487848129321

இந்த பென்குவின்கள் டைனோசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் டைனோசர் போல் அல்லாது பென்குவின்கள்  குறுங்கோள்களின் (asteroids) தாக்குதலையும், அதனால் விளைந்த காலநிலை மாற்றத்தையும் தாக்குப்பிடித்து வாழ்த்திருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் பென்குவின்களின் உணவு நிலத்தில் அல்லாது கடலில் கிடைத்ததால் என்கின்றனர் வல்லுனர்கள்.

இதற்கு முன்பு அண்டார்டிகாவில் கிடைத்த 37 மில்லியன் வயதான 1.6 மீட்டர் உயரமுள்ள பென்குவின் புதைபடிவமே பழமையானது.

Source Daily Mail