களை எடுக்கும் ரோபோ

விவசாயத் துறையில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பல வேலைகளுக்கு தானியங்கி ரோபோக்களை மேற்கு நாடுகளில் விற்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு, மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் களை எடுத்தல் வேலையை செய்ய வந்திருக்கிறது, ‘டெர்ட்டில் (Tertill).’அமெரிக்காவிலுள்ள பிராங்ளின் ரோபாடிக்ஸ் (Franklin Robotics) இதை தயாரித்திருக்கிறது.வீட்டுத் தோட்டத்தில் இந்த இரு சக்கர ரோபோவை விட்டுவிட்டால், அதுவே, களைகளை வெட்டி சாய்த்துவிடும். தக்காளி, மிளகாய், பூச் செடிகளை அது ஒன்றும் செய்யாது. செடிகளை விட்டு, களைகளை மட்டும் வெட்டும்படி டெர்ட்டில் ரோபோவில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளும், உணரிகளும் பார்த்துக்கொள்கின்றன.

அதேபோல, தோட்டப் பகுதியை விட்டு இந்த ரோபோ தவறுதலாக வேறுபக்கமும் போகாது. சூரிய ஒளித் தகடுகள் பொறுத்தியிருப்பதால், இதற்கு மின் தேவையும் இல்லை. 2017 இறுதியில் சந்தைக்கு வரவிருக்கும், 18,000 ரூபாய் மதிப்புள்ள டெர்ட்டில் ரோபோவுக்கு இப்போதே ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

2

ROBOT THAT WEEDS YOUR GARDEN

Franklin Robotic’s  Robot Tertill is solar and battery powered robot that weeds your garden. The device is designed to stay outside, even during periods of rain. Sensors in the robot cause it to turn away from (largish) plants and detect when it has run into an obstacle; after which it alters its path.

Tertill can’t tell what is a weed and what is a desired plant as such – it operates purely on size, so seedlings need to be protected with a special collar. As it rolls over a small plant, a small whipper snipper beneath the robot cuts the plant off.

The company says Tertill uses proprietary algorithms to ensure that it finds as many weeds as it can.

There appears to be a lot of potential challenges with this gadget; such as getting enough sunlight in areas frequently shaded using what looks to be a very small solar panel, garden layout needing to be just so, and knocking the tops off some weeds would just see the weed grow again. It will be interesting to see how this creation looks and operates if it hits prime time.

Source : Dinamalar

Advertisements

மேகமலையில் புதிய வகை தாவரம் கண்டுபிடிப்பு

தேனி மாவட்டம், மேகமலையில் ‘இம்பேஸியன்ஸ் மேகமலையானா’ (impatiens megamalaiyana) என்ற புதிய வகை தாவரத்தை காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் அத்துறை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் காடுகளில் காணப்படும்  ‘காசித் தும்பை’ என்று வழக்குச் சொல்லால் அழைக்கப்படும் ‘இம்பேஸியன்ஸ்’ எனும் தாவர இனம் தனிச் சிறப்பு வாய்ந்தது.

ஓராண்டு முதல் பல்லாண்டு தாவரங்களாக வளரும் இவை ஆப்பிரிக்கா, மடகாஷ்கர், இந்தியா மற்றும் இலங்கையில் பரவிக் காணப்படுகின்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட இந்த தாவரம் மிகவும் அடர்த்தியான, ஈரப்பதமான மலைப்பகுதிகளிலும், பாறைகளிலும் மட்டும் வளரக் கூடியவை. இந்த தாவரங்கள் இந்தியாவில் ஏறக்குறைய 245 வகைகள் உள்ளன. பழனி மலை, ஆனை மலை, நீலகிரி, மூணாறு மற்றும் அகஸ்தியர் மலைகளில் இவ்வகை தாவரம் செறிந்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காந்திகிராம பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய சமீபத்திய தாவர இனங்கள் தேடலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மேகமலை வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிப் பரப்புகளில் இம்பேஸியன்ஸ் தாவர வகைகளில் புதிய வகை தாவர சிற்றினத்தை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து உத விப் பேராசிரியர் ராம சுப்பு கூறியதாவது: ‘மேகமலையில் கண்டு பிடித்துள்ள புதிய தாவ ரத்துக்கு ‘இம்பேஸி யன்ஸ் மேகமலை யானா’ என பெயரிடப் பட்டுள்ளது. 28 செ.மீ. முதல் 42 செ.மீ. உயரம் வளரக்கூடிய குறுஞ்செடி. வெளிர் சிவப்பு நிறத்துடன் அடர் மஞ்சள் நிறத்தில் பூக்களைக் கொண்டது. பொதுவாக ஜூலை முதல் அக்டோபர் வரை பூக்கும் இயல்பு கொண்ட இவை, கடல் மட்டத்துக்கு மேல் 1,451 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் ஈரப்பதமான பாறைப் பகுதிகளில் வளரும். வருடத்தில் மே முதல் ஜூன் வரை விதைகள் முளைக்கத் தொடங்கி முழுவதுமாக வளர்ச்சி அடைந்து ஜனவரி மாதங்களில் அழிந்துவிடும்’.

இந்த புதிய தாவரம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தாவரவியல் ஆராய்ச்சி நிலையத்தில் உலர் தாவரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இம்பேஸியன்ஸ் தாவர இனங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. கண்களைக் கொள்ளை கொள்ளும் பல்வேறு வண்ணங்களுடன் வேறுபட்ட அமைப்பைக் கொண்ட இந்த தாவரங்களின் பூக்களைச் சார்ந்து பல்வேறு பூச்சிகளும், வண்டுகளும் வாழ்கின்றன. குறிப்பிட்ட மண் வகை, மழைப்பொழிவு மற்றும் இடச்சூழலைச் சார்ந்து வளர்வதால், வேறு இடங்களுக்கு இவை அதிகமாக பரவுவது இல்லை. அதனால், இவ்வகை தாவரங்கள் மிக அபூர்வமாகி வருகின்றன.

Source: Tamil hindu