துாக்கத்திற்க்கான FABP7 மரபணுக்கள்

துாக்கத்திற்கும் மரபணுக்களுக்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பதை மட்டுமல்ல, துாக்கத்தின் தன்மையை கட்டுப்படுத்தும் மரபணுவை, அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தின் (Washington State University) ஜேசன் கெர்ஸ்ட்நேர் (Jason Gerstner) தலைமையிலான  விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். FABP7 என்ற மரபணு, எலி மற்றும் ஈ போன்றவற்றில் துாக்கத்தின் தன்மையை கட்டுப்படுத்துவதை கண்டுபிடித்தனர்.

040517TB_SleepGene.jpg

300 ஜப்பானியர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் FABP7 என்ற மரபணு இருந்த 29 பேர் நிம்மதியாக உறங்கினர்.  இதன் மூலம், மனிதர்களின் மூளையிலும் இந்த மரபணு, துாக்கத்தின் தன்மையை கட்டுப்படுத்துவதை உறுதி செய்துள்ளனர்.

flo 4

Sleep Gene FABP7

Good night wishes might make us humans go to bed happy, but it’s a gene that determines sleep quality and allows sound sleep, scientists said.

Jason Gerstner of the Washington State University and his colleagues demonstrated that the gene, called FABP7, plays a role in controlling the sleep quality of mice and fruit flies.

During the current study, Gerstner and his colleagues saw that mice with a knocked out FABP7 gene slept more fitfully compared to normal mice with the gene intact, suggesting the gene is required for normal sleep in mammals.

To see if FABP7 is indeed required for normal sleep in humans, Gerstner and his colleagues in Japan looked at the data from nearly 300 Japanese men who underwent a seven-day sleep study that included an analysis of their DNA.

It turned out that 29 of them had a variant of the gene responsible for the production of FABP7, and like the mice, they tended to sleep more fitfully. While these people would get the same amount of sleep as other people, they would wake up more often during the night.

While the researchers were excited about finding a gene with an apparently strong influence on sleep, they stressed that other genes are almost certainly involved in the process.

Source Dinamalar and news cgtn

Advertisements

யானைகளின் தூக்கம்

ஆப்ரிக்காவின் சோபி தேசியப் பூங்காவில் 9Chobe National Park, Botswana,) ஆப்ரிக்க யானைகளின் உறக்கம் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார் பேராசிரியர் பால் மேங்கர்(Professor Paul Manger).

உலகிலேயே மிகக் குறைந்த நேரம் உறங்கும் பாலூட்டி யானை தான் என்று சொல்லியிருக்கிறார் பால் மேங்கர். காட்டில் சுற்றும்  இரண்டு பெண் யானைகளின் தந்தத்தில் Actiwatch என்ற கருவி பொருத்தப்பட்டது. இது அந்த யானைகளின் உறங்கும் நேரத்தைக் கணக்கெடுக்கும். மேலும் அதன் தோளில் Gyroscope என்ற கருவி பொருத்தப்பட்டது. இது யானைகள் எந்தெந்த நிலைகளில் உறங்கும் என்பதைக் கணக்கிடும்.

இதன்படி யானைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குவதாக கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், அதிகபட்சமாக 46 மணி நேரம் வரை தூங்காமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்ததையும் பதிவு செய்துள்ளனர். இது உலக ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இதுவரை சரணாலயத்திலோ, மிருகக்காட்சி சாலைகளிலோ இருக்கும் யானைகளைக் கொண்டுதான் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதன்படி ஒரு யானை சராசரியாக 6 மணி நேரம் வரை தூங்கும் என்று சொல்வார்கள். ஆனால், காட்டு யானைகள் இவ்வளவு குறைந்த நேரம்தான் தூங்குகிறது என்பது ஆச்சரியமான விஷயம்.

யானைகளின் குறைந்த நேரத்தூக்கத்திற்கு காரணம் அதன் உடல் பெரிது என்பதும், நிறைய உணவுகளைத் தேடி சாப்பிட வேண்டும் என்பதால் நிறைய நடந்து, குறைவாகத் தூங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள்

3DD8E7A500000578-0-image-a-32_1488395247920.jpg

இரண்டு நாட்களில் தூங்காமல் தொடர்ந்து 30 கிமீ தூரத்திற்கு உணவைத் தேடி அவை நடக்கின்றன. மேலும், சில இடங்களில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால் அந்தப் பகுதிகளில் நிற்காமல் கடக்கின்றன யானைகள். யானைகள் குறித்த விடை தெரியா மற்றுமொரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ரெம் REM என்று சொல்லக்கூடிய Rapid Eye Movement Sleep உறக்கத்தின் 5 நிலைகளில் ஒன்று. நம் தசைகளும், எலும்புகளும் ஓய்வெடுக்கும் போது, இந்த உறக்க நிலை நமக்குக் கிடைக்கும். இந்த நிலையில் தான் லூசிட் (Lucid) கனவுகள் வரும். அதாவது, அரைத் தூக்கக் கனவு மாதிரி. இந்தக் கனவுகள் நமக்கு நன்றாக நினைவிலிருக்கும். மிருகங்களுக்கு இந்தக் கனவுகள் தான் அதிகப்படியான ஞாபக சக்தியைக் கொடுக்கின்றன. பாலூட்டிகளில் அதிக ஞாபக சக்தி கொண்டது யானை தான் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், யானைகள் நெடு நேரம் நின்றுகொண்டே தூங்குகின்றன. மிகவும் குறைவாகத் தூங்குகின்றன. இந்த நிலைகளில் தசைகளும், எலும்புகளும் இறுகியே இருக்கும். இதன்படி பார்த்தால் யானைகளுக்கு “ரெம்” உறக்கம் அதிகபட்சமாக வாரத்திற்கொரு முறைதான் வரும் வாய்ப்பு இருக்கிறது. லூசிட் கனவுகளும் வாரத்திற்கொரு முறைதான். முடிவுகள் இப்படியிருக்க, யானைக்கு எப்படி அபாரமான ஞாபக சக்தி இருக்கிறது எனக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.

Source விகடன்