பட்டாம்பூச்சியும் சூரிய ஒளி தகடும்

புதிய பொருட்களை உருவாக்க இயற்கையிடமிருந்து விஞ்ஞானிகள் கற்றுக்கொள்வது பரவலாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை (Australian National University) சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள், பட்டாம்பூச்சியின் இறக்கை அமைப்பை ஆராய்ந்து, செம்மையாக செயல்படும் சூரிய ஒளித் தகடுகளை வடிவமைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். நீல நிறத்திலுள்ள, ‘மார்போ டிடியஸ்’ (Morpho Didius) என்ற பட்டாம்பூச்சி, தன் இறக்கையிலுள்ள நுண்ணிய அமைப்புகளை வைத்து, சூரிய ஒளியை சிதற வைத்தல், பிரதிபலித்தல், உறிஞ்சுதல் ஆகியவற்றை தன் விருப்பப்படி செய்வதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் நீரஜ் லால் (Dr Niraj Lal ) மற்றும் அவர்களது குழுவினர் கண்டறிந்தனர். நீலப் பட்டாம்பூச்சியின் இறக்கையிலுள்ள அதே போன்ற நேனோ அமைப்புகளை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி, இயக்கியபோது, ஒளியை விரும்பியபடி கட்டுப்படுத்த முடிந்தது என்று நீரஜ் லால் தெரிவித்துள்ளார்.

இத் தொழில்நுட்பத்தை வைத்து சூரிய மின் ஒளித் தகடுகளை தயாரித்தால், கிடைக்கும் ஒளியில் அதிக மின்சாரம் தயாரிப்பது சாத்தியமாகலாம். மேலும், கட்டடங்கள், ராணுவம் போன்ற பல துறைகளிலும் இத் தொழில்நுட்பம் உதவும், என, நீரஜ் தன் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

balls

Butterfly wings inspire solar technologies

Taking a closer look at butterfly’s iridescent wings is paving the way for next-generation solar and stealth technologies.

The iridescent blue Morpho Didius became a muse for a group of Australian National University engineers fascinated by the tiny cone-line shaped nanostructures that scatter light to create its luminous colour.  Lead researcher Dr Niraj Lal said until now being able to make light go exactly where you wanted it to had proven tricky.

“We were surprised by how well our tiny cone-shaped structures worked to direct different colours of light where we wanted them to go,” he said. “Techniques to finely control the scattering, reflection and absorption of different colours of light are being used in the next generation of very high-efficiency solar panels,” he said.

The aim of the team’s light experiments was to absorb all of the blue, green and ultraviolet colours of sunlight in the perovskite layer of a solar cell. And to absorb all of the red, orange and yellow light in the silicon layer – known as a tandem solar cell with double-decker layers.

But beyond solar technology the technique could one day be used to make opaque objects transparent to certain colours, and vice versa, as part of new stealth applications. Or in architecture to control how much light and heat passed through windows.

Dr Lal said the technique, inspired by nature, had strong commercial promise as it was very scalable and did not require expensive technology.

Source Dinamalar and Sydney Morning Herald

மிதக்கும் சூரிய மின்நிலையம்

இந்தியாவின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்நிலையம் கேரள மாநிலம் காயம்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கூட்டுச் சுழல் மின்உற்பத்தி ஆலையில் (Rajiv Gandhi Combined Cycle Power Plant) 100 கிலோ வாட் பீக் (kilowatt peak) ஆற்றல் அளவுகொண்ட சூரிய மின்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. தேசிய அனல் மின் கழகம் (NTPC – National Thermal Power Corporation Limited) இந்தத் தகடுகளை நிறுவியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீருக்குள் சூரிய மின் நிலையம் அமைப்பதால் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் வெப்பம் குறைக்கப்படுகிறது. இதனால் மின் ஆற்றல் உற்பத்தி இழப்பும் குறையும். மேலும் இந்தத் தகடுகளை மேலே நிறுத்துவதன் மூலம் சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாவதும் குறையும். அதனால் மிதக்கும் சூரிய மின் நிலையம் இப்போது உலகம் முழுவதும் பரவலாகிவருகிறது. உலகின் முதல் மிதக்கும் சூரிய மின் நிலையம் தென்கொரியாவின் அன்சியோங் நகரத்தில் நிறுவப்பட்டது.

banner-154181_960_720

India’s largest Floating Solar Photo Voltaic Plant

NTPC started power generation from India’s largest floating solar power plant at Kayamkulam in Kerala.The 100 kWp floating solar PV generation plant, largest of its kind in India, was indigenously developed as a part of ‘Make in India’ initiative, at Rajiv Gandhi Combined Cycle Power Plant (RGCCPP) in Kerala’s Kayamkulam district, the company said in a statement.

Solar panels mounted on floating boards that hold them in place saves land usage and has been found to be efficient than the ones installed on land. It has various benefits like conserving water through reduction of evaporation, increased generation due to cooling effect on the panels, reduced installation time etc and could be installed on saline water environment.  The system was installed by Swelect Energy Systems Ltd, Chennai with support from NETRA & NTPC Kayamkulam station in a short span of 22 days.

World’s first floating solar power plant was built on Geumgwang reservoir in Anseong, Gyeonggi Province,in Korea.

Source Hindu

சூரிய சாலை ( Solar Road)

 

Inauguration Of The First Solar Road in France - Tourouvre Au Perche, Orne

உலகின் முதல் சூரிய சாலை ( Solar Road) டிசம்பர் 2016ல் வட பிரான்ஸின் Normandy நகரின் ஒரு கிராமத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு  ஒரு  வழி பாதை பகுதிக்கு ( single  lane ) போடப்பட்டது.

5 மில்லியன் யூரோ செலவில்  2800 சதுர மீட்டருக்கு சூரிய தகடுகள் (Solar panel) சாலையில் பதிக்கப்பட்டது. கனரக வாகனங்களையும் (trucks) கடும் போக்குவரத்தையும் தாங்குமளவு வலிமையாக்க சிலிக்கான் தாளை கொண்ட resin சூரிய தகடுகள் மேல் பூசப்பட்டது. இதன் மூலம் அந்த கிராமத்தின் தெரு விளக்குகளுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். பிரெஞ்சு அரசாங்கம்  இன்னும் 5 ஆண்டுகளில் 1000 kms  சாலைகளை சூரிய சாலைகளாக மாற்ற இலக்கு வைத்திருக்கிறது.

Source Newsweek