செவ்வாயை வலம் வர போகும் மின் கார்

‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி நிறுவனம் தயாரித்து வரும், ‘பால்கன் ஹெவி’ (Falcon Heavy) என்ற சக்தி வாய்ந்த ராக்கெட்டின் புகைப்படத்தை,  ‘டுவிட்டர்’ மூலம் அதிபர், எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார். இந்த ராக்கெட், 2018ல் செவ்வாய் கிரகத்தை சுற்றும் வெள்ளோட்ட முயற்சிக்கு பயன்படுத்தப்படும்.

ஏற்கனவே பலமுறை, ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பிய, ‘பால்கன் 9’ ராக்கெட்டைப் போல, மூன்று ராக்கெட்டுகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது பால்கன் ஹெவி. இதன் உந்து சக்தி, 18 போயிங், 747 விமானங்களின் உந்து சக்திக்கு இணையானது. இதற்கு முன் இத்தனை சக்தி வாய்ந்த ராக்கெட், 1973ல் அமெரிக்கா அனுப்பிய, ‘சாட்டர்ன் 5’ ராக்கெட் தான். எனவே தற்போது உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் பால்கன் ஹெவி தான்.

sp

”வழக்கமாக இது போன்ற வெள்ளோட்டங்களுக்கு கான்கிரீட் துண்டுகள் போன்றவற்றை நிரப்பி அனுப்புவர். அது எங்களுக்கு போரடித்துவிட்டது. ”எனவே, என் சிவப்பு நிற ரோட்ஸ்டரை, சிவப்பு கிரகத்தை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு சுற்றிக்கொண்டிருக்கும் ராக்கெட்டில் வைத்து அனுப்பப்போகிறோம்,” என, அவர் விளக்கினார்.

நாசாவின், சாட்டர்ன் 5 ராக்கெட் கிளம்பிய அதே தளத்திலிருந்து, 2018 ஜனவரியில் பால்கன் ஹெவி கிளம்பும். “அந்த சோதனையின்போது ராக்கெட் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால், நாசாவின் தளத்தை சேதப்படுத்தாமல் வெகு துாரம் போய் வெடித்தால் நல்லது,” என, தெரிவித்தார் மஸ்க்.

balls

Elon Musk to blast a Tesla Roadster car into space

Elon Musk is using his new rocket to fire his most famous creation, an original Tesla Roadster, on an indefinite voyage into space.

The Falcon Heavy rocket is preparing for its debut launch this month ( January 2018). “Test flights usually contain mass simulators in the form of concrete or steel blocks,” Mr Musk said. “That seemed extremely boring . . . so we decided to send something unusual.”

The car will be playing David Bowie’s Space Oddity on its stereo system and is destined for a Mars orbit. “I love the thought of a car drifting through space and perhaps being discovered by an alien race millions of years in the future,” he said.

Falcon Heavy, announced as a concept in 2011, was designed to fly people and cargo to the moon and Mars — goals shared by Nasa, the US space agency, but challenged by ever-shifting budgets and timelines.

Powered by 27 Merlin engines, the rocket will generate 4.7 million pounds of thrust at launch, allowing it to carry more freight into space than any other vehicle. Four years later than planned, it stands on launch pad 39A of the Kennedy Space Centre, Florida, from which Nasa sent men to the moon in the 1960s and 1970s.

Standing 229ft (70m) tall, it consists of three stages or segments, which Mr Musk aims to bring back. Recycling rockets is a feat that he has achieved with his less-powerful Falcon 9, and significantly reduces the costs of space flight.

The test launch will be preceded by a series of static tests on the pad in the coming days. Despite his high hopes, Mr Musk has cautioned that the launch could end in spectacular failure.“There’s a real chance the vehicle won’t make it to orbit,” he said in the summer. “I hope it makes it far enough away that it does not cause pad damage. I would consider even that a win.”

Source : Dinamalar and The Times

ஹைப்பர்லூப் (Hyperloop)

அதிவேக வளையப் போக்குவரத்து (Hyperloop) என்பது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்காக விமானத்தை விட வேகத்தில், கிட்டத்தட்ட வெற்றிடமாக்கப்பட்ட (near-vacuum tube (99.9% air is removed) வளையத்தினுள் செல்லக் கூடிய வாகன அமைப்பு ஆகும். இதனை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் வடிவமைத்துள்ளது.

குழாய்களைப் பயன்படுத்தி அதி வேகத்தில் செல்லும் கருத்தாகமானது ஸ்பேஸ் எக்ஸ்ஸின் எலொன் மசுக் (Elon Musk) என்பவரால் 2012ல் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது.

636030757259556361-1129479309_elon-musk

கட்டுமானச் செலவைக் குறைக்கும் வகையில் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதில் பைபர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதில் மூன்று கேப்சூல்கள் இணைக்கப்பட்டு காந்த சக்தியால் இயங்கக்கூடியது Hyperloop. ஒவ்வொரு கேப்சூலிலும் எட்டு பயணிகள் வரை அமர முடியும்.

இந்த ‘குழாய் வழி’ அதிவேக போக்குவரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 1200 கி.மீ வேகத்தை எட்ட முடியும். இது ஏறக்குறைய ஒலியின் வேகமாகும். இந்த ரெயிலை இயக்குவதற்காக குழாய்களின் மீது சோலார் தகடுகளும், ரெயில் செல்லும் பாதைகளில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்படும்.

021_14A_HYPERLOOP ART

இது வெற்றிடமாக்கப்பட்ட குழாய்களில் இயக்கப்படுவதால், அதிர்வுகள், சப்தம் இருக்காது என்பதால் சொகுசான பயணத்தை பெற முடியும். நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பு பாதிக்கப்படாது. இது முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குவதால், மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களும் தவிர்க்கப்படும்.

உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு துபாய்-அபுதாபி நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், துபாய் மற்றும் அபுதாபி இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களில் இருந்து 12 நிமிடங்களாகக் குறைகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் கட்டமமைப்பு  பணிகள் முடித்து ஹைப்பர்லூப் போக்குவரத்து செயல்பாட்டுக்கு வரும். இந்த சாதனம் போக்குவரத்து உலகில் புதிய புரட்சியை படைக்கும் என்று கருதப்படுகிறது.

balls

Hyperloop

Hyperloop is a proposed mode of passenger and freight transportation that would propel a pod-like vehicle through a near-vacuum tube (99.9% air is removed) at more than airline speed. The tube is suspended off the ground to protect against weather and earthquakes. Passengers would sit in capsules, which would then be accelerated with magnets. The Hyperloop can travel in the speed of sound i.e., 760 mph (1,220 km/h). Each Capsules carry six to eight people. Each Hyperloop train consists of three capsules.

The concept of high-speed travel in tubes has been around for decades, but there has been a resurgence in interest in pneumatic tube transportation systems since the concept was reintroduced, using updated technologies, by Elon Musk after 2012, incorporating reduced-pressure tubes in which pressurized capsules ride on an air cushion driven by linear induction motors and air compressors.

Hyperloop uses a combination of alternative energy and conservation techniques such as photovoltaics, wind, kinetic, regenerative braking, and geothermal power to ensure sustainability and low cost.

World’s first Hyperloop track is being built in Dubai. Hyperloop will connect the two emirates, Dubai and Abu dhabi which are 150km apart in 12 minutes (Travel time by car is 90 mins). Its first passenger track could be operating by 2021.

Source Wikipedia and Daily Mail