பாதாம், முந்திரி தின்று வந்தால் விந்தணு சக்தி அதிகரிக்கும்

பாதாம், முந்திரி போன்ற உலர் கொட்டை வகைகளை தொடர்ந்து உண்டு வந்தால் விந்தணுவின் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயினின் ரோவிரா ஐ விர்கிலி பல்கலைக்கழகத்தை(Universitat Rovira i Virgili, in Spain) சேர்ந்த டாக்டர் ஆல்பர்ட் ஹுட்டஸ் (Dr Albert Salas-Huetos) தலைமையில் நடத்திய ஆய்வில் பாதாம், ஜாதிபத்திரி கொட்டைகளை 14 நாட்களுக்கு தினசரி உண்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பாலுறவுத் திறனும் அதிகரிக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் ..

18 முதல் 35 வயது வரை உள்ள ஆரோக்கியமான 119 ஆண்களை தேர்வு செய்து அவர்களை இரு பிரிவாக பிரித்தனர். அதில். ஒரு பிரிவுக்கு தினமும் வழக்கமான உணவுடன் 60 கிராம் கொட்டை வகைகள் வழங்கப்பட்டன. மற்றொரு பிரிவினருக்கு வழக்கமான உணவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

குறிப்பிட்ட நாளுக்கு பிறகு இரு பிரிவினரின் விந்து சோதிக்கப்பட்டது. இதில் கொட்டை வகைகளை உண்டவர்களின் விந்தணு எண்ணிக்கை 14% வரை அதிகரித்திருந்திருந்தது. விந்தணுக்களின் திறன் 4%, நகரும் தன்மை 6% அதிகரித்துக் காணப்பட்டது. விந்தணுக்களின் அளவும் 1% அதிகரித்திருந்தது. இது ஆரோக்கியமான விந்தணுக்கள் எப்படி இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையுடன் பொருந்திப் போகிறது.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டிஆக்சிடன்ட்டுகள், பி வைட்டமின் ஆகியவை மிகுந்த உணவுகளும்  கருவுற வைக்கும் திறனை மேம்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். இவை அனைத்தும் கொட்டை வகைகளில் இருப்பதுடன் மற்ற சத்துகளும் உள்ளன.

ஆனால் இந்த ஆய்வு முடிவுகளை அப்படியே ஏற்க முடியுமா என சந்தேகம் தெரிவிக்கின்றனர் சில ஆய்வாளர்கள். ஏனெனில் இந்த ஆய்வு ஆரோக்கியமான நபர்களிடம் மட்டுமே செய்யப்பட்டடது. எனவே கருத்தரிக்க வைக்கும் திறன் குறைபாடுள்ள ஆண்கள் உள்ளிட்ட மற்ற பிரிவு ஆண்களுக்கும் இது பொருந்துமா என்பது கேள்விக்குறியே என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

balls

Eating nuts could improve sperm health

Eating nuts regularly could improve sperm health, a study suggests.

Men who ate about two handfuls of mixed almonds, hazelnuts and walnuts daily for 14 weeks improved their sperm count and had more viable “swimmers”, found Dr Albert Salas-Huetos, from the Universitat Rovira i Virgili, in Spain, who led the study.

The scientists randomly divided 119 healthy men between the ages of 18 and 35 into two groups:

One added 60 grams (2oz) of nuts a day to their normal diet

One made no changes to what they ate

Those in the nut group improved sperm:

count by 14%

vitality by 4%

motility (movement) by 6%

morphology (shape and size) by 1%

All of these are the parameters the World Health Organization lists as measurements of sperm quality and are associated with male fertility.

Experts said the study backed up others that showed a diet rich in omega-3 fatty acids, antioxidants and the B vitamin folate improved fertility. Nuts contain many of these and other nutrients.

However, researchers cautioned that these men were healthy and apparently fertile, so it was not clear whether the findings would apply to the wider population, including men with fertility problems.

Source : BBC