ஒரு கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த குரங்கின் பல்

இமாச்சல பிரதேசத்தில் சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குரங்கின் பல் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 38 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணபித்கஸ் என்ற விலங்கினம் குறித்து மேலும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பல் படிவம் உதவும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் பல் படிவம் இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஹரிதலிங்கர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வாழ்ந்து வரும் கிப்பன் (gibbons) என்ற குரங்கின் முந்தைய கால வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது குறித்துப் பேலியோ ஆய்வு மையத்தின் (Paleo Research Society) தலைவரான அனேக் அங்கியான், “பியோபித்செக்கின் என்ற குரங்கின் வழித்தோன்றலாகக் கிருஷ்ணபித்கஸ் இருக்க வாய்ப்புள்ளது. இந்த உயிரி னத்தைப் பற்றி விஞ்ஞானிகள் முன்பு அறிந்திருக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு கிருஷ்ணபித்கஸ் என்ற உயிரினத்தின் பழக்க வழக்கம் மற்றும் அதனுடைய பரிணாம வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள உதவும்” என்கிறார்.

ΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣΣ

Scientists Find Nine Million Years Old Ape Fossils In Himachal

Scientists have discovered that a primitive ape-like ancestor, which was till now thought to be a native of only Eurasia, had existed in India too, a leap in research on human evolution.

The fossil was dug up by scientists during an excavation in Haritalyangar in Shiwalik hills region in Himachal Pradesh, about 120 km from Shimla on the road to Kangra.

The fossils are nine million years old and are in the form of lower molar germs or permanent teeth that are un-erupted and still forming in lower jaw. The crowns of both the molars are fully formed, but there is no root formation. This indicates that they belonged to infants of slightly different ages at the time of their deaths. One specimen is a partial right first molar and other a complete left second molar.

The apes seemed to be slightly larger (about 15 kg heavier) than the modern-day Siamang Gibbons, that are found in the Himalaya and South-East Asia.

Detailed studies showed that the specimens were similar to those of a genus of primitive ape-like ancestors called pliopithecoid, which were widespread in Eurasia during the Miocene period (18 million to seven million years ago).

The specimens were also consistent in size and morphology to an upper third molar that was found in the same region in the 1970s. At that time it was suspected that the specimen was perhaps related to pliopithecoid genus but it was highly worn out and could not be studied properly. The specimen was initially identified as Pliopithecus krishnaii but was later transferred to a new genus Krishnapithecus.

The research team consisted of Dr. Anekh R.Sankhyan, a retired anthropologist from the Anthropological Survey of India, Dr. Jay Kelley of Institute of Human Origins and School of Human Evolution and Social Change, Arizona State University and Terry Harrison of the Centre for the Study of Human Origin in the Department of Anthropology at New York University.

Source Hindu and Outlook

Advertisements

குளுகோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் பரிசோதனை முறை

நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் குளுகோமா என்ற கண் நீர் அழுத்த நோயினால் உலகம் முழுவதும் 60 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், மூன்றில் ஒரு பகுதி பார்வையிழந்த நிலையிலேயே தங்களுக்கு பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

_95800230_glaucoma

இதுதொடர்பான ஆராய்ச்சியில் புதிய பரிசோதனை முறையை உருவாக்கியிருப்பதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கியிருக்கும் புதிய கண் பரிசோதனை முறை மூலம், கண்பார்வை குறைபாடு தெரிய ஆரம்பிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குளுகோமா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

கண்ணுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால், விழித்திரையில் உள்ள நரம்பு மண்டலங்கள் சேதமடைந்துவிடுகின்றன. அழுத்தம் காரணமாக அந்த செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, கொழுப்பு அமைப்புகள் சேர்ந்து அந்த நரம்பு செல்களை தடிமனாக்குகிறது.

இந்த செல்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலான ஒளிரும் வண்ண திரவத்தை பயன்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவை, விழியின் ரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகின்றன. ஒளிரும் சாயத்திரவங்கள் இந்த நரம்பு செல்களை ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. அதன்பிறகு, கண் சிகிச்சை நிபுணர், கண்களின் பின்பக்கத்தைப் பரிசோதிக்க வேண்டும். விழித்திரை, வெள்ளைப் புள்ளிகளுடன் ஒளிர்ந்தால், அந்த நோயாளிக்கு பிரச்சனை இருப்பதாக உறுதிப்படுத்தக் கொள்ள முடியும். இந்த நோய் கண்டறிவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடையாளம் காணலாம்

இந்த பரிசோதனை இது வரை 16 நபர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டது. இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் குளுகோமாவால் பார்வையிழப்பு ஏற்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கவும், பிற நரம்பு ரீதியான நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று இந்த ஆய்வுக்கு நிதியுதவி அளித்த வெல்கம் அறக்கட்டளையின் பெதன் ஹக்ஸ் (Bethan Hughes) தெரிவித்துள்ளார்.

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

Test may spot glaucoma before symptoms begin

Glaucoma affects 60 million people around the world and most have lost a third of their vision by the time they are diagnosed.

It might be possible to treat the main cause of permanent blindness before people notice any loss of vision, say University College London researchers. They have developed a new kind of eye exam that might spot glaucoma a decade before symptoms appear. It uses a fluorescent dye that sticks to the cells in the retina that are about to die.

But it has been tested on just 16 people in safety trials and far more research is needed, the study says.

The disease is usually caused by changes to the pressure inside the eye that kills the retina’s nerve cells. As these cells become stressed and sickly, they start to change their chemistry and more fatty structures move to the outside of the cell. This is what the fluorescent dye, which is injected into the bloodstream, sticks to.

Then all an optician has to do is look at the back of the eye and if the retina is illuminated in white fluorescent dots then the patient has a problem.

Current treatments to control the eye’s internal pressure can stop or slow down the progression of the disease, although they cannot reverse the damage already done. Treatment is much more successful when it is begun in early stages of the disease, when sight loss is minimal.

Bethan Hughes, from the Wellcome Trust, which funded the research, said: “This innovation has the potential to transform lives for those who suffer loss of sight through glaucoma, and offers hope of a breakthrough in early diagnosis of other neurodegenerative diseases.

Source BBC

 

செயற்கை கருப்பை

குறைமாத ஆட்டுக்கருவை பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையை (Children’s Hospital of Philadelphia) சேர்ந்த விஞ்ஞானிகள், பலவாரங்களுக்கு செயற்கை கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து சாதனை படைத்திருக்கின்ரனர்.

பிளாஸ்டிக் பைக்குள் ஆட்டின் கரு வளரத்தேவையான சத்துக்களடங்கிய பனிக்குடநீர் நிரப்பப்பட்டது. தொப்புள் கொடி மூலம் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் ஒரு இயந்திரத்திலிருந்து செலுத்தப்பட்டது. அதன் நுரை ஈரல் மற்றும் உறுப்புக்கள் வளர்ச்சியடைய சில வாரங்களுக்கு செயற்கை கருப்பைக்குள் வைக்கப்பட்டது.

26A_PREMATURE LAMB WOMB Graphic V1

செயற்கை கருப்பைக்குள் இருக்கும் போதே கண்கள் திறந்தன, கம்பளி ரோமங்கள் உருவாகின. 23 நாட்களுக்கு பிறகு நுரை ஈரல் முழுமையாக செயல் பட ஆரம்பித்ததும் அதை வெளியே விட்டனர்.

இதுபோன்ற செயற்கைக் கருப்பை, குறைமாத மனித குழந்தைகளை பாதுகாக்க உதவுமென விஞ்ஞானிகள்நம்புகிறார்கள்.

சில கூடுதல் ஆய்வுகளுக்குப்பின் இதை மனிதக்கருக்களில் சோதிக்க முடியுமென்றும் கருதுகிறார்கள்.

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

Premature lambs kept alive in ‘plastic bag’ womb

Scientists at Children’s Hospital of Philadelphia have been able to keep premature lambs alive for weeks using an artificial womb that looks like a plastic bag.

The plastic “biobag” womb contains a mixture of warm water and added salts, similar to amniotic fluid, to support and protect the foetus.

This fluid is inhaled and swallowed by the growing foetus, as would normally happen in the womb. Gallons of the mixture are steadily flushed through the bag each day to ensure a continuous fresh supply.

The bagged lamb cannot get a supply of oxygen and nutrients from its mum via the placenta. Instead, it is connected to a special machine by its umbilical cord, which does the job.

The baby lamb’s heart does all the pumping work, sending “old, used” blood out to the machine to be replenished before it returns back to the body again.

The whole system is designed to closely mimic nature and buy the tiniest newborns a few weeks to develop their lungs and other organs.

They opened their eyes, grew a woolly coat and appeared comfortable living in their polyethylene homes.

After 28 days, when their lungs had matured enough, the lambs were released so they could start breathing air.

The approach might one day help premature human babies have a better chance of survival, experts hope. Scientists believe the artificial womb could be ready for human trials in 5 years.

Source BBC

விண்வெளிக்கு நாசாவின் ராட்சத பலூன்

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை.

100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தகவல்களை  அனுப்பி கொடுக்கும்.

1

Nasa’s super soaring space balloon

 Mega balloon – the size of a football stadium – was launched in New Zealand by NASA.

Its job is to study tiny particles that come from deep space and end up floating around Earth’s atmosphere.

It’ll float around our planet for 100 days reporting data back to scientists on the ground.

 Source : BBC

‘ட்ரீ ஆன் எ சிப்’ (Tree-on-a-chip)

உயரமான ரெட்வுட் மரத்திலிருந்து சிறிய புல் வரை, தண்ணீரை வேரிலிருந்து நுனி இலை வரை கொண்டு செல்லசெல்லவும், இலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரையை வேர் வரை கொண்டு செல்லவும்    இயற்கையின் நீரியல் குழாய்களான மரவியம் மற்றும் பட்டையம் (xylem and phloem) அமையப்பெற்றிக்கின்றன. இயற்கையிடமிருந்து இந்த உத்தியை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய Massachusetts Institute of Technology) விஞ்ஞானிகள் ஒரு மைக்ரோ சிப்பை உருவாக்கி இருக்கின்றனர். இந்த சிப், எந்த தூண்டு சக்தியும் இல்லாமல் செடியை போன்றே தண்ணீரையும் சர்க்கரையையும் நிலையான ஓட்ட விகிதத்தில் பம்ப் பண்ணியது.

சிப்பின் இந்த திறனானது எளிய ஹைட்ராலிக் இயக்கியாக சிறிய ரோபோக்களை இயக்க பயன்படும். ‘ட்ரீ ஆன் எ சிப்’ (tree-on-a-chip) என இந்த தொழில்நுட்பத்திற்கு பெயர் வைத்திருக்கின்றனர். இந்த தொழில் நுட்பத்தில் ரோபோக்களை இயக்க மின்சாரத்திற்கு பதிலாக சர்க்கரையும் தண்ணீரும் போதும்.

red ribbon with bow with tails

Tree-on-a-chip

Trees and other plants, from towering redwoods to diminutive daisies, are nature’s hydraulic pumps. They are constantly pulling water up from their roots to the topmost leaves, and pumping sugars produced by their leaves back down to the roots. This constant stream of nutrients is shuttled through a system of tissues called xylem and phloem, which are packed together in woody, parallel conduits.

Now engineers at MIT and their collaborators have designed a microfluidic device they call a “tree-on-a-chip,” which mimics the pumping mechanism of trees and plants. Like its natural counterparts, the chip operates passively, requiring no moving parts or external pumps. It is able to pump water and sugars through the chip at a steady flow rate for several days.

Anette “Peko” Hosoi, professor and associate department head for operations in MIT’s Department of Mechanical Engineering, says the chip’s passive pumping may be leveraged as a simple hydraulic actuator for small robots. The team’s new pumping mechanism may enable robots whose motions are propelled by inexpensive, sugar-powered pumps.

Source MIT edu

அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் செல்லும் சீன ரயில்

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சாங்க்விங்(Chongquing), மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம். இங்கே 31,000 சதுர மைல்களில் 4.9 கோடி மக்கள் வசிக்கிறார்கள். காலியான இடம் கிடைப்பதே கடினம். புதிதாக சாலையோ ரயில் வழித்தடமோ அமைப்பதற்குக்கூட இடம் இல்லை. அதனால்,ரயில் செல்லும் பாதையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்காமல், ரயில் பாதையை அமைத்துள்ளனர். 19 மாடிகள் கொண்ட மூன்று குடியிருப்புகளுக்குள் ரயில்கள் செல்லுமாறு இந்த பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. 6, 7, 8-வது தளங்கள் மட்டும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைக்குக் கீழும், மேலும் மக்கள் குடியிருக்கிறார்கள். ஒரு ரயில் போவதற்கும் இன்னொரு ரயில் வருவதற்குமாக இரண்டு பாதைகள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. ரயில் செல்லும் சத்தம் குடியிருப்புவாசிகளைப் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக ஒலி உள்வாங்கிக்கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. “கட்டிடத்தைப் பாதிக்காத வகையில் எடை குறைந்த தண்டவாளங்கள்தான் போடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டிடத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓடும்போது சில நேரங்களில் பாத்திரம் சுத்தம் செய்யும்போது கருவியில்(dishwasher) வரும் ஒலி போல் கேட்கும். மற்றபடி எங்கள் தலைக்கு மேல் ரயில்கள் ஓடுகின்றன என்ற நினைப்பே வராது.வரிசையாக மூன்று குடியிருப்புகளுக்குள் நுழைந்து ரயில் வெளிவருவதைப் பார்க்க அற்புதமாக இருக்கும்!” என்கிறார் ஒரு குடியிருப்பு வாசி.

balls

Train goes through the centre of a 19-storey block of flats in China

The city of Chongqing in the south-east of the country has a population of 49 million packed into 31,000 square miles, causing urban planners to look creatively at solving space issues.

A special railway station was built into the block of houses, set into the sixth to eighth floors.

Residents can hop on Chongqing Rail Transit No.2 at their own Liziba station.

Even though they are living in close quarters to a busy train station, any noise has been muffled by special equipment.

To homeowners in the complex, the sound of the train is designed to be as disturbing as the noise from a dishwasher

Source Hindu