அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் செல்லும் சீன ரயில்

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சாங்க்விங்(Chongquing), மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம். இங்கே 31,000 சதுர மைல்களில் 4.9 கோடி மக்கள் வசிக்கிறார்கள். காலியான இடம் கிடைப்பதே கடினம். புதிதாக சாலையோ ரயில் வழித்தடமோ அமைப்பதற்குக்கூட இடம் இல்லை. அதனால்,ரயில் செல்லும் பாதையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்காமல், ரயில் பாதையை அமைத்துள்ளனர். 19 மாடிகள் கொண்ட மூன்று குடியிருப்புகளுக்குள் ரயில்கள் செல்லுமாறு இந்த பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. 6, 7, 8-வது தளங்கள் மட்டும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைக்குக் கீழும், மேலும் மக்கள் குடியிருக்கிறார்கள். ஒரு ரயில் போவதற்கும் இன்னொரு ரயில் வருவதற்குமாக இரண்டு பாதைகள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. ரயில் செல்லும் சத்தம் குடியிருப்புவாசிகளைப் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக ஒலி உள்வாங்கிக்கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. “கட்டிடத்தைப் பாதிக்காத வகையில் எடை குறைந்த தண்டவாளங்கள்தான் போடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டிடத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓடும்போது சில நேரங்களில் பாத்திரம் சுத்தம் செய்யும்போது கருவியில்(dishwasher) வரும் ஒலி போல் கேட்கும். மற்றபடி எங்கள் தலைக்கு மேல் ரயில்கள் ஓடுகின்றன என்ற நினைப்பே வராது.வரிசையாக மூன்று குடியிருப்புகளுக்குள் நுழைந்து ரயில் வெளிவருவதைப் பார்க்க அற்புதமாக இருக்கும்!” என்கிறார் ஒரு குடியிருப்பு வாசி.

balls

Train goes through the centre of a 19-storey block of flats in China

The city of Chongqing in the south-east of the country has a population of 49 million packed into 31,000 square miles, causing urban planners to look creatively at solving space issues.

A special railway station was built into the block of houses, set into the sixth to eighth floors.

Residents can hop on Chongqing Rail Transit No.2 at their own Liziba station.

Even though they are living in close quarters to a busy train station, any noise has been muffled by special equipment.

To homeowners in the complex, the sound of the train is designed to be as disturbing as the noise from a dishwasher

Source Hindu

Advertisements

ஹைப்பர்லூப் (Hyperloop)

அதிவேக வளையப் போக்குவரத்து (Hyperloop) என்பது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்காக விமானத்தை விட வேகத்தில், கிட்டத்தட்ட வெற்றிடமாக்கப்பட்ட (near-vacuum tube (99.9% air is removed) வளையத்தினுள் செல்லக் கூடிய வாகன அமைப்பு ஆகும். இதனை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் வடிவமைத்துள்ளது.

குழாய்களைப் பயன்படுத்தி அதி வேகத்தில் செல்லும் கருத்தாகமானது ஸ்பேஸ் எக்ஸ்ஸின் எலொன் மசுக் (Elon Musk) என்பவரால் 2012ல் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது.

636030757259556361-1129479309_elon-musk

கட்டுமானச் செலவைக் குறைக்கும் வகையில் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதில் பைபர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதில் மூன்று கேப்சூல்கள் இணைக்கப்பட்டு காந்த சக்தியால் இயங்கக்கூடியது Hyperloop. ஒவ்வொரு கேப்சூலிலும் எட்டு பயணிகள் வரை அமர முடியும்.

இந்த ‘குழாய் வழி’ அதிவேக போக்குவரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 1200 கி.மீ வேகத்தை எட்ட முடியும். இது ஏறக்குறைய ஒலியின் வேகமாகும். இந்த ரெயிலை இயக்குவதற்காக குழாய்களின் மீது சோலார் தகடுகளும், ரெயில் செல்லும் பாதைகளில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்படும்.

021_14A_HYPERLOOP ART

இது வெற்றிடமாக்கப்பட்ட குழாய்களில் இயக்கப்படுவதால், அதிர்வுகள், சப்தம் இருக்காது என்பதால் சொகுசான பயணத்தை பெற முடியும். நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பு பாதிக்கப்படாது. இது முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குவதால், மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களும் தவிர்க்கப்படும்.

உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு துபாய்-அபுதாபி நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், துபாய் மற்றும் அபுதாபி இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களில் இருந்து 12 நிமிடங்களாகக் குறைகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் கட்டமமைப்பு  பணிகள் முடித்து ஹைப்பர்லூப் போக்குவரத்து செயல்பாட்டுக்கு வரும். இந்த சாதனம் போக்குவரத்து உலகில் புதிய புரட்சியை படைக்கும் என்று கருதப்படுகிறது.

balls

Hyperloop

Hyperloop is a proposed mode of passenger and freight transportation that would propel a pod-like vehicle through a near-vacuum tube (99.9% air is removed) at more than airline speed. The tube is suspended off the ground to protect against weather and earthquakes. Passengers would sit in capsules, which would then be accelerated with magnets. The Hyperloop can travel in the speed of sound i.e., 760 mph (1,220 km/h). Each Capsules carry six to eight people. Each Hyperloop train consists of three capsules.

The concept of high-speed travel in tubes has been around for decades, but there has been a resurgence in interest in pneumatic tube transportation systems since the concept was reintroduced, using updated technologies, by Elon Musk after 2012, incorporating reduced-pressure tubes in which pressurized capsules ride on an air cushion driven by linear induction motors and air compressors.

Hyperloop uses a combination of alternative energy and conservation techniques such as photovoltaics, wind, kinetic, regenerative braking, and geothermal power to ensure sustainability and low cost.

World’s first Hyperloop track is being built in Dubai. Hyperloop will connect the two emirates, Dubai and Abu dhabi which are 150km apart in 12 minutes (Travel time by car is 90 mins). Its first passenger track could be operating by 2021.

Source Wikipedia and Daily Mail