பிளாஸ்டர் மூலம் தடுப்பு மருந்து

ஃபுளூ தடுப்பு மருந்தை வலியின்றி உடலில் செலுத்தக்கூடிய மிக முன்னேறிய வழிக்கான பரிசோதனைகளை அமெரிக்க ஆய்வாளர்கள் மனிதர்கள் மத்தியில் மேற்கொண்டிருக்கின்றனர்.

மிகநுண்ணிய ஊசிகளைக்கொண்ட சின்னஞ்சிறு பிளாஸ்டர்பட்டி மூலம் இந்த மருந்தை இனி உடலுக்குள் செலுத்த முடியும்.

20161104_story3Pic1

இந்த தடுப்பு மருந்தை குளிரூட்டியில் வைத்திருக்கத்தேவையில்லை. தேவைப்படுபவர்கள் மற்றவர் உதவியின்றி தாமே இதை உடலில் ஒட்டிக்கொள்ளலாம்.

மின்வசதியில் தன்னிறைவை எட்டாத வளர்ந்துவரும் நாடுகளில் இது மிகப்பெரிய புரட்சிகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

1

Painless flu jab patch

A ‘painless’ sticking plaster flu jab that delivers vaccine into the skin has passed important safety tests in the first trial in people.

The patch has a hundred tiny hair-like microneedles on its adhesive side that penetrate the skin’s surface.

It is simple enough for people to stick on themselves.

Unlike the standard flu jab, it doesn’t need to be kept in the fridge, meaning pharmacies could easily stock it on their shelves for people to buy.

Volunteers who tested it said they preferred it to injections.

It offers the same protection as a regular vaccine, but without pain, according to its developers from Emory University and the Georgia Institute of Technology, who are funded by the US National Institutes of Health.

The patch punctures the uppermost layers of the skin, whereas regular flu injections go all the way through and into muscle.

The patch can be thrown in the bin after it is used because the microneedles dissolve away.

And because it can be safely stored for up to a year without refrigeration, it could prove extremely useful in the developing world.

Source BBC

ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து பொடி (Rotavirus vaccine)

ro.jpg

உயிர் காக்கும் தடுப்பூசிகளை குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைத்திருக்காவிட்டால், அவை வீரியமிழந்துவிடும். ஆப்ரிக்கா போன்ற மின் வசதி, குளிர் பதன வசதி குறைந்த நாடுகளில், கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்களுக்கு இது பெரிய சவால்.

இந்த பிரச்னைக்கு புனேயிலுள்ள, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ ஒரு புது தீர்வை கண்டறிந்துள்ளது. வயிற்றுப் போக்கை உண்டாக்கி, ஆண்டுதோறும்  5 லட்சம் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான  ‘ரோட்டா வைர’சுக்கு எதிரான, பி.ஆர்.வி.- பி.வி., என்ற தடுப்பு மருந்தை, திரவ நிலையிலிருந்து உலர்ந்த பொடியாக மாற்றி வெற்றி கண்டுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட்.அதி குளிர்ச்சியுள்ள திரவ நைட்ரஜனில், பி.ஆர்.வி.-பி.வி., தடுப்பு மருந்துள்ள கலனை குளிர்வித்து, பிறகு அதிலுள்ள நீரை வெற்றிடத்தால் உறிஞ்சிய பிறகு, அது உலர்ந்து பொடியாகி விடுகிறது. இதை மருத்துவ பணியாளர்கள் எங்கும் எடுத்துச் செல்லலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலம், 2014ல் நைஜர் நாட்டில், 3,500 குழந்தைகளுக்கு இந்த முறையில் மூன்று தடவை தரப்பட்ட போது ரோட்டா வைரஸ் நோய் கணிசமாக தணிந்தது.எதிர்காலத்தில் பிற தடுப்பூசி மருந்துகளுக்கும் இந்த முறையை பின்பற்ற முடியுமா என ஆய்வுகள் தொடர்கின்றன.

4

Rotavirus vaccine powder

A vaccine capable of enduring scorching temperatures for months at a time could strike a decisive blow in the fight against rotavirus, preventing nearly half a million children around the world from dying of diarrhoea each year.

To make the vaccine stable at room temperature, scientists at the Serum Institute of India borrowed a trick from the food world: They freeze-dried it.They literally dunked the vaccine into liquid nitrogen and then sucked all the water out of it with a vacuum. All that’s left is a dry powder that’s stable sitting on your desk or on a truck driving many miles to a rural area.

When the vaccine is ready to be used, a health worker simply dissolves the powder in a salt solution and puts a few drops on a baby’s tongue.

Unlike existing vaccines, the BRV-PV vaccine does not require refrigeration and can remain stable for up to one year at 37C or six months at 40C. It is particularly effective against the strains of rotavirus found in sub-Saharan Africa.

In an experiment that started in 2014, WHO tested BRV-PV on more than 3,500 babies in Niger. They found the vaccine was just as safe and effective as those available now. When babies received three doses, BRV-PV cut the number of severe rotavirus cases by more than two-thirds.

Source Dinamalar

எபோலாவுக்கு தடுப்பு மருந்து

deadstate-ebola-vaccine

2014ல் ஆப்பிரிக்காவில் 11000 பேரை கொன்று வேகமாக பரவிய, உலகையே அசச்சுறுத்திய எபோலா (ebola) கொள்ளை நோய் வராமல்  100 சதவிகிதம் தடுக்கக்கூடிய vaccine கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தடுப்பு மருந்தை போன வருடம் கினியாவில் 5837 பேருக்கு கொடுத்து பரிசோதித்த பொது அவர்கள் யாரையும் எபோலா நோய் தாக்கவில்லை.ஆனால் அந்த தடுப்பு மருந்து கொடுக்காத  அந்த ஊரின் 6004 பேரில் ,23 பேருக்கு எபோலா நோய் தொற்று ஏற்பட்டது.

இந்த தடுப்பு மருந்துக்கு மருத்துவ ஒழுங்குமுறை அதிகாரத்திலிருந்து (regulatory authority)   இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் பெருமளவு எபோலா  நோய் தொற்று  பரவினால் உடனே கொடுக்க 300000 doses தடுப்பு மருந்து  கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Source World Health Organisation