அதி வேக வை-ஃபை

நெதர்லாந்தின் எயிண்டோவென் பல்கலைகழகத்தை சேர்ந்த (Eindhoven University of Technology in The Netherlands) இன்ப்ரா ரெட் கதிர்களை (Infra Red rays) அடிப்படையாக கொண்ட கம்பியில்லா இணையத்தை( Wireless internet ) உருவாக்கியிருக்கிறார்கள். புழக்கத்தில் இருக்கும் wi-fi நெட்வொர்க்குகளை விட இது 100 மடங்கு வேகமானது. இதன் தகவல் பரிமாற்ற வேகம் 40 Gigabits per second (Gbit/s).

மேற்கூரையில் பதிக்கப்பட்ட ஒளி ஆண்டெனாக்கள்,ஒளியிழை மூலம் வரும் ஒளிக்கதிர்களை துல்லியமாக திருப்பிவிடுவதால் கம்பியில்லா தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. பயனாளி ஒளி ஆண்டெனாவின் திசையிலிருந்து வெறு திசைக்கு திரும்பும் போது அந்த திசையில் இருக்கும் ஒளி ஆண்டெனா மூலம் தகவல் பரிமாற்றம் தொடரும்.

balls

New Wi-Fi system to offer super-fast connectivity

Scientists have developed a new wireless Internet based on infrared rays that is reportedly 100 times faster than existing Wi-Fi networks.

The wireless network developed by researchers at Eindhoven University of Technology in The Netherlands not only has a huge capacity — more than 40 Gigabits per second (Gbit/s)

The wireless data comes from a few central ‘light antennas’, which can be mounted on the ceiling, that are able to precisely direct the rays of light supplied by an optical fibre.

The antennas contain a pair of gratings that radiate light rays of different wavelengths at different angles (‘passive diffraction gratings’).

Changing the light wavelengths also changes the direction of the ray of light. A safe infrared wavelength is used that does not reach the retina in the eye.

If a user is walking about and a smartphone or tablet moves out of the light antenna’s direction, then another light antenna takes over, researchers said.

The network tracks the precise location of every wireless device using its radio signal transmitted in the return direction, they said.

Current Wi-Fi uses radio signals with a frequency of 2.5 or five gigahertz. The new system uses infrared light with wavelengths of 1,500 nanometres and higher. Researchers managed to achieve a speed of 42.8 Gbit/s over a distance of 2.5 metres. The team said that even with the best Wi-Fi systems currenly available, users would not get more than 300 Megabit/s in total, which is some hundred times less than the speed per ray of light achieved by the new system.

The system has so far used the light rays only to download; uploads are still done using radio signals since in most applications much less capacity is needed for uploading.

Source The Hindu

LI- FI தொழில்நுட்பம்

Li-fi என்றால் என்ன?

இருட்டில் டார்ச் லைட் அடிக்கும்போது, அந்த ஒளி செல்லும் பாதையை கவனித்ததுண்டா? பல நுண்ணிய துகள்கள் அதில் பயணிப்பது தெரியும். அதுபோல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-fi தொழில்நுட்பம்.   li –fi என்றால் light fidelity.

இப்போதிருக்கும் wifi டெக்னாலஜியில், வீடு வரை கேபிள் மூலம் வரும் இந்த டேட்டா, வயர்லெஸ் மோடம் மூலம் ரேடியோ அலைகளாக மாற்றப்படுகிறது. ரேடியோ அலைகளில்  டேட்டா நமது மொபைல் அல்லது லேப்டாப்புக்கு கடத்தப்படுகிறது. அங்கே அந்த அலைகள் டீ-கோட் செய்யப்பட்டு தேவையான தகவல்களாக ஸ்க்ரீன் தெரிகிறது. இந்த ரேடியோ அலைகளின் வேகம் தான் இப்போது வைஃபையின் வேகத்தை நிர்ணயிக்கிறது. Lifiயில் இந்த டேட்டா ஒளியின் மூலம் கடத்தப்படுவதால் அதன் வேகம் அதிகம். வைஃபையின் வேகத்தை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் டேட்டா பயணிக்கும்.

எப்படி செயல்படுகிறது?

எல்.ஈ.டி. பல்புக்கு சீரான மின்சாரம் கிடைக்கும்போது அது ஃபோட்டானை வெளிப்படுத்துகிறது. அந்த ஃபோட்டானைத்தான் நாம் வெளிச்சம் என்கிறோம். எப்போதாவது லோ-வோல்டேஜில் மின்சாரம் வரும்போது அந்த ஒளி குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். பல்புக்கு வரும் மின்சாரத்தின் அளவைக் கட்டுப்படுத்தினால் பல்பும் அதற்கேற்றது போல ஃபோட்டானை வெளிப்படுத்தும். Lifi வசதி இருக்கும் மொபைல் அல்லது லேப்டாப் அந்த சிக்னலை டீ-கோட் செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும்.

lifi-technology-perfect-slides-16-638

யார் கண்டுபிடித்தது?

ஜெர்மனைச் சேர்ந்த பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் என்பவர்தான் Li-fiயின் பிதாமகர். 2011-ம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் ஒளியால் டேட்டாவை கடத்த முடியும் என்ற தியரியை அவர்தான் முன் வைத்தார். அடுத்த ஆண்டில் இந்த தொழில்நுட்பம் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த சிலரை ஒன்று சேர்த்து ’Pure Lifi’ என்ற குழுவை உருவாக்கினார். இவர்கள் இதுவரை Lifiல் இயங்கும் இரண்டு புராடக்டுகளை தயாரித்திருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

லைஃபை சிறப்புகள்:

100 MBPSக்கே நம்ம ஊர் நெட் நொண்டியடிக்க, 10GBPS எளிதில் கடத்தி சோதனையில் வெற்றிப்பெற்றிருக்கிறது லைஃபை. வைஃபை சிக்னலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்க முடியாது. அதாவது நமது வீட்டைத் தாண்டி சிக்னல் போகாமல் பார்த்துக் கொள்ள லைஃபையில் வழியுண்டு என்பதால் பாதுகாப்பானது. ரேடியோ அலைகளோடு ஒப்பிடுகையில் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது. வீடுகளின் கூரைகள் மீது பொருத்தப்பட்ட சோலார் தகடுகள் பிராட்பேண்டு ரிசீவர்களாக செயல்படும் சாத்தியங்களும் இருக்கிறது. அதாவது நம் வீட்டுக்கு வரும் இணைய கேபிளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, அதையும் நேரிடையாக அருகில் இருக்கும் டவரில் இருந்து இணையத்தை பெற முடியும் என்கிறார்கள். வைஃபையில் ரேடியோ அலைகள் இருப்பதால் மருத்துவமனை, விமானங்கள், மற்றும் பல பாதுகாப்பான பகுதிகளில் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கெல்லாம் லைபை முக்கிய பங்காற்றும்.

குறைகள்:

லைஃபை என்பது வைஃபைக்கு மாற்று என சொல்ல முடியாது. ஒளி நாம் போகும் எல்லா இடங்களுக்கும் வந்துவிடாது. இதை இன்னொரு வயர்லெஸ் தொழில்நுட்பமாக மட்டுமே கருத முடியும். ஆனால், விலை குறைந்த, எந்த பாதகமும் இல்லாத எளிமையான, வேகமான தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.

ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றாலும் லைஃபை புராடக்டுகள் சந்தைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அது வரும்போது மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

Source விகடன்