உயிரிக்கண்கள் (பயோனிக் கண்கள்)

மரபு வழியாக உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோயான ரெடிநிடிஸ் பிக்மென்டோசாவுக்கு  (retinitis pigmentosa) இதுவரை உரிய சிகிச்சை இல்லை. தற்போது Bionic Eye எனப்படும் உயிரிக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரிட்டன் மருத்துவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதற்கான மேலதிக ஆய்வுக்கு நிதியளிக்கப்போவதாக பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உயிரிக்கன் செயல்படும் விதம்

பயோனிக் கண்களை இயக்கும் சாதனம் ஆர்கஸ் II (Argus® II Retinal Prosthesis System).இந்த ஆர்கஸ் II, கண்களின் விழித்திரையில் (Retina) மின் தூண்டலை (electrical stimulation) உருவாக்குகிறது. இதனால் பார்வை இழந்தவர்களுக்கு கருத்து காட்சி (visual perception) தூண்டப்படுகிறது

blind-nhs-patients-to-be-fitted-with-pioneering-bionic-eye-science-the-guardian

நோயாளியின் மூக்குகண்ணாடியில் பொருத்தப்பட்ட ஒரு மிகச் சிறிய அளவிலுள்ள வீடியோ கேமரா, காட்சிகளை பதிவு செய்யும்.பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நோயாளியிடம் உள்ள சிறிய கணினியில் தகவல்களாக மாற்றப்பட்டு மறுபடியும் மூக்குகண்ணாடிக்கு அனுப்பபடுகிறது. இந்த தகவல்கள் நோயாளியின் கண்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ள ஒரு சாதனத்திலுள்ள ஆண்டெனாவிற்கு செல்கிறது. பின்பு சமிக்ஞைகள் மின்அதிர்வுகளாக (electric pulses) மாற்றப்பட்டு, சேதமடைந்த ஒளிவாங்கியை (Photo receptors) புறக்கணித்து, விழித்திரையின் மீதமுள்ள செல்களை தூண்டுகிறது. பின்பு காட்சித்தகவல்கள் பார்வை நரம்பு மூலம் மூளைக்கு அனுப்பப்பட்டு காட்சிகளாக நோயாளிக்கு தெரிகிறது.

பயோனிக் கண்களால் நோயாளியால் தெளிவாக காட்சியை காண முடியாது.இருட்டும் வெளிச்சமுமாய், அசைவுமாய் தெரியும்.அதாவது முகத்தை தெளிவாக பார்க்க முடியாது, ஆனால் எதிரில் நபர் இருப்பது போவது போன்றவை தெரியும்.

‘பயோனிக் கண்’ சிகிச்சைக்கு Rs.1,25,19,194 செலவாகும்.

Source The Guardian

Leave a comment