அதிவேக டி.என் ஏ கணினி

இயங்கும் (Computing) போதே வளரும் கணினியை மன்செஸ்டர் பல்கலைகழகத்தை (The University of Manchester ) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பேராசிரியர் ராஸ் டி கிங் (Professor Ross D King) தலைமையிலான குழு, ஒரு நிர்ணயிக்கப்படாத உலகளாவிய டூரிங் மெஷினை (Non-deterministic universal Turing Machine (NUTM)) வடிவமைப்பதற்குரிய செயலாக்கத்தை விளக்கியிருக்கிறார்கள். (ஒரு டூரிங் இயந்திரம், திறன்கள் மற்றும் கணினிகள் வரம்புகள் ஆராயும் ஒரு தத்துவார்த்த இயந்திரமாகும்.)

மின்னணு கணினியிடம், இரண்டு சிக்கலான (maze) பாதை வழியாக ஒரு இடத்திற்கு போக சொன்னால் அது ஒவ்வொரு பாதையில் அடுத்தடுத்து முயற்சி செய்து சரியான பாதையை கண்டுபிடிக்கும். ஆனால் ராஸ் டி கிங் கண்டுபிடித்த கணினி, தன்னையே பிரதியெடுத்து (replicate) ஒரே நேரத்தில் இரண்டு பாதைகளில் சென்று சரியான பாதையை கண்டுபிடிக்கும். அதாவது சரியான தீர்வை கண்டுபிடிக்கும் நேரம் பாதியாக குறைகிறது.

இந்த மேஜிக்குக்கு காரணம், இந்த கணினியின் ப்ராஸசர் சிப், சிலிக்கனுக்கு பதிலாக டி.என்.ஏ வால் ஆனது. சாதாரண கணினியில் தகவல்கள் இரட்டை இலக்க (1,0 )பைனரி முறையில் இருக்கும். டி.என்.ஏ கணினியில் தகவல்கள் நான்கு எழுத்து மரபணு குறியீடாக (A (adenine), G (guanine), C (cytosine) and T (thymine)) இருக்கும்.

டி.என் ஏ சிப், சிலிகான் சிப்பை விட மிகவும் சிறியதாக இருப்பதால் ஒரு கணினியில் பல டி.என் ஏ ப்ராஸசர்களை பயன்படுத்த முடியும். இதனால் உலகின் அதிவேக கணினியை , டி.என் ஏ ப்ராஸசர்களைக் கொண்டு உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

Source Manchester

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s