சுனாமிக்கு முன் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாறுதல்கள்

கண்டுபிடிப்பு: சுனாமிக்கு முன் பூமியின் காந்தப்புலத்தில் (magnetic field) ஏற்படும் மாறுதல்கள்

ஆராய்ச்சியாளர்கள்: ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,( Kyoto University)

விவரம்: விஞ்ஞானிகள், 2009ல் சமோவாவிலும்(Samoa), 2010ல் சிலியிலும்(Chile) நிகழ்ந்த சுனாமியின் தரவுகளை வைத்து ஆராய்ந்தனர். அதன்படி, சுனாமிக்கு சில நிமிடங்கள் முன்பாக அந்தக் கடலடி நிலப்பரப்பில் புவிகாந்தப்புலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நேர்ந்ததை அவர்கள் கண்டறிந்தனர். அந்த மாற்றத்தின் அளவை வைத்து, கடலலைகள் எந்த அளவுக்கு உயர்ந்து கரை நோக்கிச் செல்லும் என்பதையும் கணிக்க முடியும்

TSUNAMIS’ MAGNETIC FIELDS ARE DETECTABLE BEFORE SEA LEVEL CHANGE

Invention: Tsunamis’ magnetic fields are detectable before sea level change

Researchers: Zhiheng Lin, geophysicist at Kyoto University, Japan

Descrtiption: The research team looked at simultaneous measurements of sea level change from seafloor pressure data and magnetic fields during the two tsunamis, a 2009 tsunami in Samoa and a 2010 tsunami in Chile. They found that the primary arrival of the magnetic field, similar to that of the beginning of a seismic wave, can be used for the purpose of early tsunami warning. The tsunami-generated magnetic field is so sensitive that even a wave height of a few centimeters can be detected.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2925711 and https://agupubs.onlinelibrary.wiley.com/doi/10.1029/2021JB022760

சுனாமியை கணிக்கும் கணிதம்

சுனாமியின் பேரலைகள் வரும் முன் எச்சரிக்க கணிதத்தை பயன்படுத்த முடியும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக (Cardiff University ) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கரையிலிருந்து பல மைல்கள் தொலைவில், கடலுக்கு அடியில் நில நடுக்கம் துவங்கும்போதே ஒலி அலைகள் ஏற்படுவதுண்டு.

இந்த ஒலி அலைகள், நில நடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலைகள் பயணிப்பதைவிட, வேகமாக, கடலடி நீர் பரப்பில் நாலா பக்கமும் பயணிக்கும் திறன் கொண்டவை.

எனவே, கடலடியில் நிலத் தட்டுக்கள் நகரும்போது எழும் மெல்லிய ஒலி அலைகளின் இடம், திசை, வேகம், அகலம், நிகழும் நேரம் போன்றவற்றை வைத்து, சுனாமி அலைகள் கடலை எட்ட எவ்வளவு நேரமாகும் என்பதை, சில நிமிடங்களில் கணித்துவிட முடியும் என, கார்டிப் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

balls

Detecting tsunamis

Mathematicians have devised a way of calculating the size of a tsunami and its destructive force well in advance of it making landfall by measuring fast-moving underwater sound waves, opening up the possibility of a real-time early warning system.

The sound waves, known as acoustic gravity waves (AGWs), are naturally occurring and can be generated in the deep ocean after tsunami trigger events, such as underwater earthquakes.

They can travel over 10 times faster than tsunamis and spread out in all directions, regardless of the trajectory of the tsunami, making them easy to pick up using standard underwater hydrophones and an ideal source of information for early warning systems.

In a new study, scientists from Cardiff University have shown how the key characteristics of an earthquake, such as its location, duration, dimensions, orientation, and speed, can be determined when AGWs are detected by just a single hydrophone in the ocean.

More importantly, once the fault characteristics are found, calculating the tsunami amplitude and potential destructive force becomes more trivial, the researchers state.

Underwater earthquakes are triggered by the movement of tectonic plates on the ocean floor and are the main cause of tsunamis.

Source : Dinamalar and Cardiff